"பார்சல்" தாமதமானதால் உணவகத்தை அடித்து உடைத்து ஊழியர்களையும் தாக்கிவிட்டுச் சென்ற போதை கும்பல்

0 3566

நெல்லை மாவட்டம் முக்கூடலில் குடிபோதையில் உணவகத்தில் ரகளை செய்த கும்பல், பொருட்களை அடித்து, உடைத்து சூறையாடியதோடு, ஊழியர்களை தாக்கிவிட்டுச் சென்றது.

சிங்கம்பாறையைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவர் முக்கூடலில் உணவகம் நடத்தி வருகிறார். சனிக்கிழமை மதியம் குடிபோதையில் சாப்பாடு பார்சல் கேட்டு வந்த ஒரு கும்பல், சாப்பாடு தயாராவதற்கு சிறிது தாமதம் ஆனதால் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

பின்னர் பார்சல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்ற கும்பல், ஆயுதங்களுடன் வந்து உணவக மேஜைகள், இருக்கைகள் என அனைத்தையும் அடித்து உடைத்ததோடு, ஊழியர்களையும் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றது.

இந்தக் குடிகார கும்பல் அப்பகுதியில் நீண்ட காலமாகவே பிரச்சனை செய்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments